ஒவ்வொரு பெண்ணிற்கும் இரண்டு கருவிதைப்பைகள் கருப்பையின்  அருகில் இருக்கும்.கருவிதைப்பையில் உள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கையானது வயிற்றுக்குள் இருக்கும்போதே  தீர்மானிக்கப்படுகிறது 350 - 400 லட்சங்கள் கருமுட்டைகளானது உறக்க நிலையில் இருக்கும்.பெண்கள் பூப்பெய்தும் பருவத்தில்  கருமுட்டைகளானது சிறுகூட்டமாக வளர ஆரம்பிக்கும். அதில் ஒருகருமுட்டையே வீரியத்துடன் வளர்ந்து கருவாக  ஆயத்தமாகும். மாதவிடாய் வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பு கருமுட்டைப்பில் இருந்து வெளியேறி கருமுட்டைக் குழாயை வந்தடையும் வந்து ஆண்உயிரணுக்களுக்காக காத்திருக்கும். புணர்வு நிகழாமல் ஆண்உயிரணுக்கள் சந்திக்கும் வாய்ப்பு அமையாததால் கருவைத் தழுவி சீராட்ட ஆயத்தமான கருப்பையின் உட்சவ்வானது இரத்தப்போக்ககாக வெளியேறுகிறது.ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் அடிப்படை இந்நிகழ்வே இது.இந்நிகழ்வானது பலதரப்பட்ட உறுப்புகளில் சுரக்கும் உயிர்வேதியியல் பொருட்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.நாளமிள்ளா சுரப்பிகளின் சுரக்கும் ஹார்மோன்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ மாதவிடாய்  சுழற்சி கட்டுப்படுத்துகிறது.இந்நிகழ்வில் ஈடுபடக்கூடிய உறுப்புக்கள்மூளைப்பகுதியில் ஹைப்போதாளமஸ்,பிட்டுய்ட்டரி ஆரம்பித்து  கழுத்து முன் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி, சிறுநீரகத்திற்கு மேலிருக்கும் அட்ரினல் சுரப்பி மற்றும் கருவிதைப்பை ஆகிய நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள் கருமுட்டை வளரும்  சூழல் மற்றும் சுழற்சிமுறையை தீர்மானிக்கும் காரணிகளாகும்.கருவிதைப்பில் பல சிறு நீர்க்குமிழ்கள் எவ்வாறு உருவாகிறது என்று அறிவோம்.கருமுட்டை வளரும் சுழற்சியில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை வெளியாகமல் பாதிவளரும் நிலையில் தடைபட்டு நிற்கும்.இதற்கு முக்கியக்காரணம் ஹார்மோன்களால் ஏற்படும் இயல்பு மாறிய நிலையே ஆகும்.ஹார்மோன்கள் சுரப்பது கட்டுப்படுத்தி சீராக்குவது: 1.மரபணுக்கள் சார்ந்தது2.நமது உணவு பழக்க வழக்கம்  3.கட்டுப்பாடற்ற சமச்சீரில்லா வாழ்க்கை முறை4.அளவுக்கதிகமான எடை5.சுற்றுப்புற சூழல்6.மனநலம் மற்றும் கவலையற்ற மனப்பான்மைசினைப்பபையில் பல சிறிய நீர்க்குமிழ்கள் ( PCOD/PCOS) அறிகுறிகள்:.1.மாதவிடாய் சுழற்சி முறையில் சிக்கல். மாதவுடாய் காலம் தாழ்ந்து / தாமதமாக வருதல்.2.நுண்ணொளிக்கற்றைப் (USG) பரிசோதனையில் சினைப்பையில் பல சிறிய நீரக்குமிழ்கள்.. 3.நாளமில்லா சுரப்பிகள் இயல்புக்கு மாறாக இயங்குதல்( hormone imbalance). ஆண்களிக்குரிய பண்பகளையுடைய ஹார்மோன்கள் அதிகமாக இருத்தல். மேலே உள்ள பண்புகளில் ஏதாவது இரண்டு பண்புகள் இருந்தால் அதை நாம்சினைப்பபையில் பல சிறிய நீர்க்குமிழ்கள்( PCOD/PCOS)  என்று அழைக்கிறோம்வருவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளவர்கள்1/ குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சர்க்கரை 2/சமச்சீரற்ற உணவுமுறைகள்3/ உடற்பயிற்சி இன்மை4/ பிறக்கும்போது எடை அதிகமாக இருத்தல்குறுகிய காலத்தில் வரக்கூடிய தொல்லைகள்1-அளவுக்கு அதிகமான எடை2-மாதவிடாய் காலம் தாழ்ந்து வருவதால் அளவிற்கு அதிகமான இரத்தப் போக்கு.3- குழந்தைப்பேறு  பெருவதில் தாமதம்4- ஆண்கள் ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதால் தோலில் மாறுபாடு, அளவிற்கு அதிகமாக முகத்தில் முடி வளர்தல்.நீண்டகாலமாக பாதிப்புகள் (அளவுக்கு அதிகமான எடையால்)1- சர்க்கரை2- இரத்தகொதிப்பு3- மார்பக புற்றுநோய் 4- கருப்பை உட்சவ்வில் புற்று நோய்5- சினைப்பை புற்று நோய்தடுப்பதற்கான வழிகள்சிறார்களை முறையான உணவு பழக்க வழக்கத்திற்கு பழக்குவதுஉடற்பயிற்சி செய்ய வைத்தல்உடல் பருமானாகமல் பாதுகாத்தல்