ஆணுறுப்பின் மொட்டு பகுதியில் முன்தோலுக்கு உள்ளே வெண்மையான படிவம் உண்டாகி இருப்பதை பார்க்கலாம். சிறுவயதில் முன் தோல் திறக்க முடியாத படி மூடி இருக்கும். வாலிப பருவத்தில் ஆணுறுப்பு பெரிதாக வளரும் பொழுது முன் தோல் விலகி மொட்டுப் பகுதியை விட்டு திறக்கும்படி இருக்கும். 

சிலருக்கு வயதானாலும் இந்த முன் தோல் இருகினபடியே இருப்பதால் அவர்கள் அதைத் திறந்து கழுவாத படி பிரச்சனைக்கு உள்ளாகின்றார்கள். 

முன் தோலுக்கு அடியில் உண்டாகும் வியர்வை, திசுக்களின் சேர்க்கை, இரவில் கழியும் விந்து, சிறுநீர் போன்ற திரவங்கள் அதற்கு அடியில் சேர்ந்து கெட்டியான கல் போன்ற அமைப்பாகவும் மாறலாம்.

 இதனால் நாளடைவில் தண்ணீர் படும் பொழுது அது கொஞ்சம் நனைந்து அரிப்பை உண்டாக்குவதாலும், வீக்கத்தை உண்டாக்குவதாலும் ஆணுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறலாம்.

 பல ஆண்களுக்கு இந்த மாதிரி திறக்காத முன் தோலுக்கு அடியில் இருக்கும் தோலின் பகுதி வெண்மையாக மாறிவிடுவதையும் நாம் பார்க்கிறோம். 

அது பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் நோய் தொற்று உண்டாகவும் அலர்ச்சி உண்டாகவும் இது காரணமாக மாறுகிறது. 

திருமணத்திற்கு முன்னே 15 வயது ஆகும் பொழுது இதை தக்க மருத்துவரிடம் காண்பித்து சரி செய்து கொள்வது நல்லது.