தாய்ப்பால் மகத்துவம் அறிவோம்-------
மருத்துவர்.இந்திரா நெடுமாறன்
தாய்ப்பால் மழலைகளின் அடிப்படை உரிமை.இயந்திரத்தனமான இன்றைய சூழலில் தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடையே மிக மிக குறைவாக உள்ளது.காரணங்கள் ; வளரும் சூழல், தனிக்குடும்பம், கர்ப்பகாலத்தில் உள்ள மனநிலை, பிறசவித்தபிறகும் சரியான சூழ்நிலை அமையாமல் இருத்தல். தாய்ப்பால் கொடுப்பதையும் ,மழலைகள் தாய்ப்பால் அருந்துவதையும் கூட்டு குடும்பத்தில் நிச்சயம் குழந்தை பருவத்திலேயே பார்த்து அறிவதற்கான வாய்ப்பு உள்ளது.இந்த வாய்ப்பானது தனிக்குடும்பத்தில் அரிது.கர்ப்பகாலத்தில் பெண்கள் மனதளவில் மற்றும் உடலளவில் தயாராக வேண்டும். பெண்கள் மனதளவில் உறுதி எடுக்க வேண்டும். என்குழந்தையின் அடிப்படை உரிமையை இழக்க நான் காரணமாக இருக்க மாட்டேன். அடுத்து குடும்பத்தினரின் அரவணைப்பும் ஒத்துழைப்பும் மிக முக்கியம்.உடலளவில் தயாராவதற்கு கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரையோ அல்லது செவிலியரையோ அணுகி மார்பக பரிசோதனைசெய்வதுஅவசியம்.மார்க்காம்பு உள்நோக்கியிருந்தால் சில எளிய சுயப்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். இது தாய்ப்பால் கொடுப்பதை எளிமையாக்கும். பிரசவித்த உடன் குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டும்.இந்தகாலத்தில் குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்.தாய் குழந்தையுடன் இருக்கும் நேரத்தில் வரக்கூடிய தடங்கல்களை (பார்வையாளர்கள்) தடுக்கவேண்டும்.தாய்ப்பால் கொடுக்கும்போது அணியக்கூடிய உடைகளை கர்ப்பகாலத்தில் தேர்ந்தெடுத்து வாங்கிவைத்துக்கொள்தல் நலம்.உடைகள் தாய்ப்பால் கொடுக்க ஏற்றபடி இருக்கவேண்டும் . இல்லாவிடில் அதுவே தாய்ப்பால் இல்லாமல் போக ஒரு காரணியாகும்.குழந்தை மார்க்காம்பில் பால் குடிக்க ஆரம்பித்தவுடன் தான்சுரப்பியில் இருந்து பால் சுரக்கும்.கவனிக்க வேண்டியது தாய்ப்பால் கொடுக்கும்போது கவனம் முழுவதும் குழந்தையின்மேல் இருக்க வேண்டும். அலைபேசியையோ அல்லது கணினியையோ இயக்குதல் கூடாது.தாய்ப்பாலின் மகத்துவம்அமிழ்தினும் இனியது தமிழ். அதைவிட இனிப்பது தாய்ப்பால். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அம்மாவிடம் எவ்வளவு விரைவாக இயலுமா அவ்வளவு சீக்கிரமாக பால்கொடுக்க ஆயத்தப்படுத்த வேண்டும். பால் சுரப்பதற்கு மார்பக முனையில் குழந்தையின் உதட்டால் ஏற்படுத்தும் தொடு உணர்ச்சியை உந்துசக்தியாகும். எவ்வளவு விரைவாக முதல் முறை நடக்கிறதோ அவ்வளவு விரைவாக பால் சுரக்கும்.சுகப்பிரசவம் என்றால் நஞ்சு வெளியேறுவதற்கு முன்பே ஆரம்பிக்கலாம்.அறுவைச்சிகிச்சையின் மூலம் என்றால் 30 -45 நிமிடங்களில் ஆரம்பிக்கலாம்.குழந்தை பசித்து அழும்போது தாய்ப்பால் கொடுக்கலாம் . தூங்கிக்கொண்டுருந்தால் நான்கு மணிநேரத்திற்கு ஒருதடவை எழுப்பி கொடுக்க வேண்டும்.மார்பகச்சுரப்பியிலிருந்து சுரக்கும் பாலானது முதல் 10 நிமி டம் வரக்கூடியது தண்ணிச்சத்து மிகுந்து இனிப்பாக இருக்கும் எளிதில் சீரணமாகி விடும். 10 நிமிடத்திற்கு பிறகு சுரக்கும் பாலானது கொழுப்பு சத்து மிகுந்து இனிப்பு சுவை குறைவாக இருக்கும். இது மெதுவாக சீரணமாக கூடியது.ஒவ்வொரு மார்பிலும் பாலூட்டும்போது 15- 20 நிமிடங்கள் கொடுக்க வேண்டும். முதல்பகுதி(10 நிமிடத்திற்குள்) பாலைமட்டும் அருந்தும் குழந்தைகள் அடிக்கடி அழுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்மற்றும் எடை அதிகரிக்காமல் இருக்கும். பின்பகுதியில் சுரக்கும் பாலையும் குடித்து வளரும் குழந்தைகளைக்கு சீரான உறக்கம் மற்றும் சமச்சீரான எடை அதிகரிப்பு இருக்கும்.தாய்ப்பால் மட்டும் குடித்து வளரும் குழந்தைகளுக்கு பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தண்ணீரோ அல்லது வேறு மாற்று உணவோ அவசியமில்லை.தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் ➡️குழந்தைக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்;குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. தாய் மற்றும் குழந்தையின் உறவை மேம்படச் செய்கிறது. தேவையான ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அளவில் கிடைக்கும்.தாய்ப்பாலூட்டும் போது பால் வெதுவெதுப்பான குழந்தைக்கு தேவையான அளவு வெப்பத்தில் கிடைக்கும்.எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய புரதசத்தானது வேண்டிய அளவில் உள்ளது.இதனால் குழந்தைக்கு சளித்தொல்லை மற்றும் வயிற்றுப் போக்கில் இருந்து பாதுகாக்கிறது.மருத்துவமனை ,மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துக்களில் இருந்து விடுதலை அளிக்கிறது.குழந்தையின் எடை சமச்சீராக அதிகரிப்பதற்கு உதவுகிறது.பிற்காலத்தில் வரக்கூடிய உடல்பருமன் மற்றும் சர்க்கரை வரும் வாய்ப்பை பெருமளவில் தடுக்கிறது.➡️தாய்க்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்; கர்ப்பகாலத்தில் உடலில் வந்தமாற்றங்கள் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது.எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. கருத்தரிப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.மார்பக புற்றுநோய் வராமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.☑️குடும்பத்திற்கான நன்மைகள்;நேர விரயத்தைத் தடுக்கும்.புட்டிப்பால் கொடுக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அதிக நேரம் பால்புட்டி சுத்தம் செய்தல் மற்றும் கிரிமி ஒழிப்பில் செலவிட நேரும் .அடிக்கடி மருத்துவமனை செல்லும் சூழ்நிலையை தடுக்கும் .குடும்ப பொருளாதாரம் மேம்படும். நிம்மதியான சூழலை உருவாக்கும்.