தற்போதைய காலகட்டத்தில் நடுத்தர வயது ( 30 வயதிலிருந்து 50 வயது வரை) பெண்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.

தற்போதைய புள்ளி விவரப்பட்டியலின் படி பெண்களை தாக்கக்கூடிய புற்று நோய்களில் மார்பக புற்று நோயானது நகர்ப்புற பெண்களில் முதல் இடத்திலும், கிராம பெண்களில் இரண்டாமிடத்திலும் உள்ளது.2012 ல் 70,218 இந்தியப் பெண்களின் உயிரைப் பறித்துள்ளது இக்கொடிய உயிர்க்கொல்லி நோய்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உலகம் சந்திக்கக்கூடிய சவால்கள்

1.மக்களின் அறியாமை

2.நோய் முற்றிய நிலையில் (Stage lll and lV)மருத்துவரை அணுகுதல்.

3.நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம்

ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் மார்பக புற்று நோயை சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் .

மார்பக புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய பொதுமக்களிடம் இதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை.

விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால் இந்த உயிர்க்கொல்லி நோயை எதிர்த்து நாம் வென்றிடலாம்.

மார்பக புற்று நோயின் அறிகுறிகள்

1.மார்பகத்தோலில் மாற்றம் ( இயல்பு நிலையிலிருந்து மாறு படுதல்)

2.மார்க்காம்பில் நீர்/ நச்சு நீர்/ இரத்த கசிவு

3.மார்பகத்தில் கடினமான தன்மை / கட்டி தென்படுதல்

மார்பக புற்று நோய்க்காரணிகள்

மாற்றி அமைக்க இயலாத காரணங்கள்
1.இரத்தசம்பந்தமான சொந்தங்களில் புற்று நோய் தாக்குதல்.( மார்பகம், உணவுப்பாதை , மலக்குடல் மற்றும் கருவிதைப்பை)

2. மிக இளம்பருவத்தில் பூப்பெய்தல்

3. தாமதமாக வயதான காலத்தில் மாதவிடாய் நிற்றல்

4. வயது 30 லிருந்து 60 வரையில் உள்ள பெண்கள்.

5. முதல் குழந்தையை 30 வயதிற்கு மேல் பெறுதல்

6.மார்பக ஊடுகதிர்
பரிசோதனையில் வேறுபட்ட தன்மை

7. ஹார்மோன் மாத்திரைகள்

8.மார்பக புற்று நோய் பாதிப்பு உள்ள பெண்களுக்கு அடுத்த மார்பகத்தில் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

9. மன அழுத்தம்

நம்மால் மாற்றி அமைக்க கூடிய காரணிகள்
1. அளவுக்கு அதிகமான எடை

2.உடற்பயிற்சி இன்மை

3.சுகாதரமற்ற , கட்டுப்பாடில்லா உணவு பழக்க வழக்கம்.