பெண்ணுறுப்பின் யோனி குழாய் மற்றும் கன்னித்திரை. 

 இவற்றைப் பற்றிய பாதுகாப்பு உணர்வு எப்பொழுதும் பெண்ணுக்கு இருக்கும். 

இது வளர்ப்பு முறையில் உருவானது. இந்தியாவின் சமூக சட்டங்களில் பெண்ணின் கன்னித்தன்மையை பாதுகாக்க வேண்டியது முற்றிலும் வலியுறுத்தப்பட்ட கருத்து. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றோரும் மற்றோரும் பெண்ணுக்கு புரிய வைக்கும் பொழுது பெண் தன்னுடைய கன்னி தன்மையை காப்பாற்ற அனைத்து முயற்சியையும் மேற்கொள்கிறாள். 

நாகரீகமான பெண்ணும் கூட இந்த கருத்துக்கு வெளிப்படையாக மறுப்பு தெரிவித்தாலும் அவர்களுடைய உள் மனதில் இது ஆழமாக பதிவாவதால் அதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் மனதிலும் மூளையிலும் உடலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும் முற்போக்காக வேலைக்குப் போயிருந்தாலும் திருமணம் என்ற விஷயம் நடந்த பின் பல பெண்களுக்கு இந்த மறைமுக கட்டுப்பாடு வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. 

இதை அதிகப்படுத்த குடும்பத்தில் பழக்க வழக்கம் உண்டாகட்டும் என்ற எண்ணமும், குழந்தை இப்பொழுது வேண்டாம் கொஞ்சம் தள்ளிப் போடலாம் என்ற எண்ணமும், குடும்பத்தில் இன்னும் வசதி செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் அதுவரை நாம் பாதுகாப்பாக இருக்கலாம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம் இப்படி பல காரணங்களால் உடலுறவு தள்ளி வைக்கப்படுகிறது. காதல் திருமணங்களில் இது அதிகமாக காணப்படுகிறது.

 எல்லோரும் நினைப்பது போல காதல் திருமணம் செய்யும் தம்பதி பிறர் பொறாமைப்படும் அளவுக்கு ஆனந்தமான வாழ்க்கையில் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. போராடி திருமண வாழ்க்கைக்குள் போகும் காதல் தம்பதி இருக்கு பல சமயங்களில் காமம் என்பது கிடைக்காமலே போகிறது. 

திருமணம் ஆகி ஒரு மாதத்திற்குள் முழுமையான இல்லற வாழ்க்கை அமையவில்லை என்றால் நீங்கள் உடனே ஒரு பாலியல் மருத்துவரை சந்தித்து ஆலோசித்து உதவி பெறுங்கள்.