தற்போதைய காலத்தில் இந்த தொந்தராவனது அதிகரித்துள்ளது.இந்த நவீனகால நோயானது குறைந்த எண்ணிக்கையில் குழந்தையைப் பெறுவதால் வருகிறது. 

இந்த குறைந்த பட்ச குழந்தைப்பேறு  தனிமனித, சமூக, நிதிநிலை மற்றும் அரசாங்க நோக்கங்களால் முடிவு செய்யப்படுகிறது.

இயல்பான நிலை35 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள பெண்களுக்கு வருகிறது.

மாதவிலக்கின் போது வலி. வலியின் வலிமை, அளவு மற்றும் காலம்அதிகரித்துக்கொண்டே செல்தல்.மாதவிலக்கு இயல்பு மாற்றமடைதல்.

நோய் கண்டறிதல்நோய்க்குறி மற்றும் அடிவயிற்றில் செய்யும் உட்பரிசோதனைநுண்ணொளிக்கற்றையால்  செய்யக்கூடிய அடிவயிற்று பரிசோதனை( USG)

இயல்பாக மாதவிலக்கு முற்றிலும் நிற்கும்போது( menopause) கருப்பையின் தசைப்பகுதிக்குள் வளரும் உட்சவ்வு படலத்தின் (ADENOMYOSIS)  பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடையலாம்.

சிகிச்சை முறைகள்1.வாய்வழி வலிநீக்கி மாத்திரைகள்2.வலிநீக்கி மாத்திரைகளால் வலிநீக்கம் இல்லை என்றால்  வாய்வழி ஹார்மோன் மாத்திரைகள்.3.ஹார்மோன்கள் வெளியிடும் கருப்பையின் உள்வைக்கும் கருவி வேதனையைக் குறைக்கும்.4.இவை அனைத்தும் வலிகுறைக்க பயனளிக்க வில்லை என்றால் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை. 

வருமுன் காப்பதற்காக ஒரு வழிகருத்தடை சாதனம் தேர்ந்து எடுக்கும்போது ஹார்மோன்கள் வெளியிடும் கருப்பையின் உள்வைக்கும் கருவியைத் தேர்வு செய்யுங்கள். இது உங்களுக்கு கருப்பையின் தசைப்பகுதிக்குள் வளரும் உட்சவ்வு படலம்(ADENOMYOSIS) வருவதற்கான வாய்ப்பை குறைக்கும்.கருப்பை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவதற்கு முன் ஹார்மோன்கள் வெளியிடும் கருப்பையின் உள்வைக்கும் கருவியைத் (மிரினா கருவியை)தேர்வு செய்யுங்கள். இது உங்களுக்கு கருப்பையின் தசைப்பகுதிக்குள் வளரும் உட்சவ்வு படலத்தினால் (ADENOMYOSIS) வரும் வேதனையைக் குறைக்கும்.அறுவைசிகிச்சையிலிருந்து விடுபட வாய்ப்பாகலாம்.