நம் அனைவருக்கும் ஹாசினி மரணம் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.என்னுடைய  மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த பெடோபிலிக் டிசார்டர் ஓர் பரபிலிக் டிசார்டர் என்போம். இதுவும் ஒரு வகையான மனநோய்.இவர்களின் நோக்கம் பொதுவாக குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதிலே இருக்கும் .

இவர்களை கண்டுபிடிப்பது எப்படி :

1. பெரும்பாலும் ஆண்களாக இருப்பார்கள் , சிலர் பெண்களும் உண்டு.

2. இவர்கள் போதைப்பொருள்களை எடுபவர்களாக இருக்கலாம்.

3. பொதுவாக 20 வயது மேல் இருப்பார்கள் .

4. இவர்கள் தனிமை(இண்ட்ரோவேர்ட்) விரும்பிகளாவும் இருக்கலாம் அல்லது சகஜமாகவும்(அம்பிவேர்ட்) இருக்கலாம். 

5. இவர்கள் பெண்களை அல்லது குழந்தைகளை மிக அதிகமாக தொட்டு பேசுவார்கள்.இனிப்பு(sweet/Chocolate) கொடுப்பார்கள்.

6. சில சமயங்களில் தனியாக விளையாடலாம் என அழைத்து செல்வார்கள்.

ஏன் எப்படி ஆனார்கள் :

1. சரியான பெற்றோர் கவனிப்பு இல்லாதவர்கள். 

2. சிறு வயதில் இவர்களையும் யாராவது பாலியல் ரிதியாக தொந்தரவு செய்தது.

3. மூலையில் amygdala( responsible for the perception of emotions such as anger, fear, and sadness, as well as the controlling of aggression.)செய்யும் மாற்றும்.

4. மிக அதிகமாக போர்ன்-Porn movie( ப்ளூ பிலிம்- முக்கியமாக குழந்தைகளை சார்ந்தது ) பார்ப்பது.

5. இவர்கள் இல்லற பாலியல் வாழ்க்கையில் திருப்தியின்மை.

ஒரு பெற்றோராக நாம் எப்படி நம் குழந்தைகளை பாதுகாத்து கொள்வது :

1. முடிந்தவரை திருமணமான பிறகு கூட்டுக்கூடுத்தனமா இருக்க பழுகுங்கள். தனி குடுத்தனம் செல்வதை தவிர்க்கவும். Joint family is very safe for child well being .

2.முதலில் யாரையும் நம்பி உங்கள் குழந்தையை விட்டு செல்ல வேண்டாம்.

3. குட் டச் , பேட் டச் சொல்லி கொடுங்கள்.

4. குழந்தை வீடு வந்தவுடன், இன்று பள்ளியில் அல்லது Day care centre/creche என்ன நடந்தது என்று விளையாட்டாக கேளுங்கள்.

5. புதிதாக ஒரு விளையாட்டு பொருள் அல்லது சாக்லேட் /ஸ்வீட் /ஐஸ்கிரீம் கையில் இருந்தால் யார் கொடுத்தது என்று கேளுங்கள்.

நம் அனைவரும் செய்ய வேண்டியது:

1. குழந்தையிடம் அதிக நேரம் செலவிடுங்கள்.

2. இன்டர்நெட் usage கட்டுப்படுத்துங்கள் 

3. கண்டிப்பாக Desktop/laptopவை பொது இடத்தில் வைக்கவும் .தனி அறையில் வைத்தால் சில அல்லது பல நேரங்களில் பாலியல் பிரிவை பார்க்க நேரிடலாம்.

4. பெண்களிடம் மரியாதையாக பழக கற்றுக்கொடுங்கள் .

5. பள்ளிகளில் ஒரு மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும்.நன்றி ,பா.இளையராஜா மனநல ஆலோசகர் கவிதாலயா மனோதத்துவ ஆலோசனை மையம் அம்பத்தூர் , சென்னை-53

Regards

B.Elayaraja

Counseling Psychologist

kavithalayaa counseling Centre, Ambattur, Chennai

www.kavithalayaacounseling.com